"மாவீரர்களை நினைவுகூர அதிபர் சிறிசேன தடையாக இருக்கிறார்" - இலங்கை எம்.பி. விஜயகலா மகேஸ்வரன்

ஈழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர அதிபர் மைத்ரிபால சிறிசேன தடையாக இருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாவீரர்களை நினைவுகூர அதிபர் சிறிசேன தடையாக இருக்கிறார் - இலங்கை எம்.பி. விஜயகலா மகேஸ்வரன்
x
ஈழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர அதிபர் மைத்ரிபால சிறிசேன தடையாக இருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதிபர் சிறிசேனா பதவி விலக வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயகலா, போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்வது ஒவ்வொரு தமிழரின் உரிமை என்று தெரிவித்தார். ஆனால் அதற்கு அதிபர் சிறிசேன தடையாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மாவீரர் தினம் - மெழுகு சுடர் மத்தியில் கண்ணீர்த் துளிகள்

மாவீரர் தினத்தை முன்னிட்டு, ஈழ விடுதலைக்கான போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அவர்கள், மெழுகுச்சுடர்களின் மத்தியில், உயிரிழந்த தங்களின் உறவுகளை நினைத்து கண்ணீர் வடித்தனர். அப்போது மணியோசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து மாவீரர் நாள் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்