ரனில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால்...ஒரு மணிநேரம் கூட அதிபராக இருக்க மாட்டேன் - சிறிசேனா

ரனில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா சூளுரைத்துள்ளார்
ரனில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால்...ஒரு மணிநேரம் கூட அதிபராக இருக்க மாட்டேன் - சிறிசேனா
x
ரனில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா சூளுரைத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தனது தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.  புதிய அரசின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு, சுதந்திரக் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும்  முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் சிறிசேனா வேண்டுகோள் விடுத்தார். அதிபர் சிறிசேனாவின் கருத்தை வரவேற்ற கட்சி நிர்வாகிகள்,  புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்