ராஜபக்சேவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவா..?

இலங்கையில் போர்க் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளில், எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்தால், ராஜபக்சேவை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ராஜபக்சேவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவா..?
x
இலங்கையில் கடந்த வாரம் திடீர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டார். இதனிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், எம்.பிக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார். தன்னை ஆதரிக்குமாறு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் தொலைபேசி வாயிலாக ஆதரவு கோரினார். 

இந்நிலையில், ராஜபச்சேவை எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான சம்பந்தன், இன்று கொழும்புவில் சந்தித்து பேசினார். அப்போது போர்க் கைதிகளை விடுவிப்பது, தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைப்பது ஆகியவை குறித்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்தால், ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என சம்பந்தன் கூறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்