பொருளாதார போட்டித்திறன் குறியிட்டு எண் வெளியீடு : இந்தியா 58 - வது இடம்

உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறித்து வெளியிடப்பட்டுள்ள குறியீட்டு எண் பட்டியலில், இந்தியா 5 இடங்கள் முன்னேறி, 58 - வது இடத்தை பிடித்துள்ளது.
பொருளாதார போட்டித்திறன் குறியிட்டு எண் வெளியீடு : இந்தியா 58 - வது இடம்
x
* உலக நாடுகளின் பொருளாதார  போட்டித்திறன் குறித்து வெளியிடப்பட்டுள்ள குறியீட்டு எண் பட்டியலில், இந்தியா 5 இடங்கள் முன்னேறி, 58 - வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா, இந்த பட்டியலில்,முதலிடம் பிடித்துள்ளது.

* உலக பொருளாதார அமைப்பின் உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண், வெளியிடப்பட்டு உள்ளது.  
* அமெரிக்கா  - முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூர்     - 2 வது இடத்தை பிடிக்க, ஜெர்மனிக்கு - 3 - வது இடம் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்து -4 , ஜப்பான் - 5 ,  நெதர்லாந்து   - 6 , ஹாங்காங்   - 7 - வது இடங்களை பிடிக்க இங்கிலாந்து  8 - வது இடத்தை கைப்பற்றி உள்ளது.

* 9 - வது இடத்தை ஸ்வீடன்  பிடிக்க, டென்மார்க்  நாட்டுக்கு-10- வது இடம்கிடைத்துள்ளது. சீனாவை பொறுத்தவரை, இந்த பட்டியலில், -28 - வது இடத்தில் உள்ளது. ரஷியா , 43 - வது இடம் வகிக்கிறது. மொத்தம் 140 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில், 
 
* இந்தியா  5 இடங்கள் முன்னேறி - 58 வது இடத்தில் உள்ளது.தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை, 67 - வது இடத்திலும், பிரேசில்   - 72 வது இடத்திலும் உள்ளன.

* ஆயினும், தெற்காசியாவின் முக்கிய உந்து சக்தியாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் இந்த வளர்ச்சி, உலக அளவில், முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்