ஈராக் மக்கள் போராட்டம்: பாஸ்ரா மாகாண கவுன்சில் அலுவலகத்தில் தீ விபத்து

ஈராக் நாட்டில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்டித்து அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈராக் மக்கள் போராட்டம்: பாஸ்ரா மாகாண கவுன்சில் அலுவலகத்தில் தீ விபத்து
x
ஈராக் நாட்டில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்டித்து அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு ஈராக்கின் மையப் பகுதியான பாஸ்ரா நகரில் கடும் உணவு பற்றாக்குறை நீடிக்கிறது. இதுதவிர மின்தடை மற்றும் உள்கட்டமைப்புகள் சேதத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஸ்ரா நகரின் பல்வேறு சாலைகள் மற்றும் தெருக்களில் பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மாகாண கவுன்சில் அலுவலகத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்த நிலையில், அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, Umm Qasr துறைமுகம் மூடப்பட்டுள்ளதை கண்டித்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்