சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம்

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளது.
சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம்
x
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில், 19 புள்ளி 11 சதவீத பேர் தமிழகம் வந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவுக்கு 18 புள்ளி 90 சதவீதம் பேரும்,  மூன்றாம் இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்திற்கு 12 புள்ளி 78 சதவீத சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். 

இதேபோல, உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 21 புள்ளி 31 சதவீத பயணிகள் தமிழகத்துக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள உத்தரப் பிரதேசத்திற்கு 13 புள்ளி 12 சதவீதம் பேரும்,  மூன்றாம் இடத்தில் உள்ள ஆந்திர பிரதேசத்திற்கு 9 புள்ளி 49 சதவீதம் பேரும் சுற்றுலா சென்றுள்ளனர்.  

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்கள், நினைவுச் சின்னங்கள் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினர் அதிக அளவில்  சுற்றுலா பயணிகளாக வருவது தொடர்கிறது. 

பன்னாட்டு விமான நிலையங்கள், தரமான சாலை வசதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் அதிகம் இருப்பதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்