வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு : "ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு : ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
x
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு  முன் ஜாமீன் வழங்ககூடாது  
சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்த மனுக்கள் இன்று மீண்டும் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, ராஜேந்திரபாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து புகார்தாரர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. புகார்தாரர் ரவீந்திரன் சார்பில் ஆடியோ ஆதாரங்களுடன் ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் விஜய நல்லதம்பியிடம் பணம் கொடுத்ததற்கான, ஆதாரங்கள், ஆடியோ ஆதாரங்கள்  உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காவல்துறை தரப்பு வாதத்திற்காக, வழக்கு விசாரணை வரும் 30 ஆம் தேதி தள்ளி வைத்த நீதிபதி , இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்