கனமழையால் படகுகள் சேதம் - படகுகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

கனமழையால் சென்னை காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர்.
கனமழையால் படகுகள் சேதம் - படகுகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்
x
கனமழையால் சென்னை காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் காசிமேட்டில் உள்ள படகுகள் சேதமடைந்த நிலையில், அமைச்சர்கள் நேரில் சென்று பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன்,  முதலமைச்சர் உத்தரவின்பேரில் படகுகளை ஆய்வு செய்ததாகவும், அறிக்கை அடிப்படையில் மீனவர்களுக்கான இழப்பீட்டை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்