ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியவில்லை - நீதிபதி சஞ்சீப் பானர்ஜி
பதிவு : நவம்பர் 17, 2021, 06:37 PM
மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, தன்னால் ஆதிக்க கலாச்சாரத்தை முழுமையாக தகர்த்தெறிய இயலவில்லை எனக் கூறியுள்ளார்.
மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, தன்னால் ஆதிக்க கலாச்சாரத்தை முழுமையாக தகர்த்தெறிய இயலவில்லை எனக் கூறியுள்ளார். 

சென்னையிலிருந்து புறப்பட்ட நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, சக நீதிபதிகள், நீதிமன்ற பதிவாளர், ஊழியர்கள், வழக்கறிஞர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனிப்பட்ட முறையில் விடைபெறாமல் நீண்ட தூரம் செல்வதற்காக மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.   

தன்னுடைய நடவடிக்கைகள் யாரையும் புண்படுத்தியிருந்தால், அது தனிப்பட்ட முறையிலானது இல்லை என்றும் அது உயர்நீதிமன்ற நலனுக்கானதாகவே இருந்திருக்கும் என்றும் சக நீதிபதிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். 

தன் மீதான சக நீதிபதிகளின் அளவு கடத்த அன்பினால் பூரித்து போயிருந்ததாகவும் நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.  நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள் என அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தற்போது போலவே வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும் எனவும்  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அறிவுறுத்தி உள்ளார்.

தனக்காக நீண்ட நேரம் காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சஞ்சிவ் பானர்ஜி, இதுநாள் வரையில் ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும், அதை தன்னால் முழுமையாக தகர்த்தெறிய இயலவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும், தனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே அனைவரிடமிருந்தும் விடைபெறுவதாக கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

607 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

181 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

87 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

10 views

மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள்

கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

5 views

பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன் "பசியால் தான் திருடினேன்" - பரிதாப காட்சி

முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத‌ சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

7 views

"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.

62 views

என் சாவிற்கு காரணம் நீ தான் - தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் மெசேஜ்

காதலித்து ஏமாற்றியதாக சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் , காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

771 views

வீட்டுக்குள் பள்ளம் விழுந்த விவகாரம் - "அறிக்கைக்கு பின் இழப்பீடு குறித்த முடிவு"- செங்கல்பட்டு ஆட்சியர்

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் வீட்டுக்குள் பள்ளம் விழுந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், கால்வாயை தூர்வாரவும், கிளைக்கால்வாய்கள் உருவாக்கவும், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.