"ரேஷன் ஊழியர்களுக்கு கடனுதவி" - கூட்டுறவுத்துறை அனுமதி
நியாயவிலை கடை பணியாளர்களுக்கு முன்பணம் வழங்கவும், கல்வி, திருமணம் மற்றும் வாகனக் கடன் அளிக்கவும் கூட்டுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.
நியாயவிலை கடை பணியாளர்களுக்கு முன்பணம் வழங்கவும், கல்வி, திருமணம் மற்றும் வாகனக் கடன் அளிக்கவும் கூட்டுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பொதுவிநியோக திட்ட விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களின் ஊதியம் அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அவர்கள் பணிபுரியும் நியாயவிலை கடைகள் எந்த கூட்டுறவு சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த சங்கத்தின் பணியாளராகவே கருதப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊதிய ஒப்பந்தம் மற்றும் துணை விதிகளின்படி சங்க பணியாளர்களுக்கு திருமண முன்பணம், கல்விக்கடன், வாகனக்கடன், வீடு கட்டும் கடன் மற்றும் நுகர்வோர் கடன்கள் வழங்கப்படுவதை போன்றே, நியாயநிலை கடை விற்பனையாளர்களுக்கும் கடன் வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய ஒழுங்குமுறை விதிகளை ஒவ்வொரு சங்கத்திலும் ஏற்படுத்தி தகுதியின் அடிப்படையில் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு முன்பணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, கூட்டுறவுச் சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story