"முத்தூட் மீதான நடவடிக்கை செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : அக்டோபர் 19, 2021, 09:51 PM
தங்க காசுகள் சப்ளை செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தங்க காசுகள் சப்ளை செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 கிராம்கள் எடையுடைய ஒரு லட்சத்து 11 ஆயிரம் தங்க காசுகளை வாங்குவதற்காக 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் அறிவிக்கப்பட்டது. அதில், 22 காரட் தரத்திலான 20 ஆயிரம் காசுகளை வழங்குவதாக கூறி முத்தூட் எக்சிம் நிறுவனம் டெண்டரில் பங்கேற்றது.

டெண்டர் திறக்கப்பட்ட பிறகு 20 நாட்கள் கழித்தே தேர்ச்சிக்கான கடிதம் கொடுக்கப்பட்டதாலும், தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்ததாலும், அதற்கேற்ப டெண்டர்  தொகையை மாற்றிக்கொடுக்கும்படி முத்தூட் நிறுவனம் சமூக நலத்துறைக்கு கடிதம் எழுதியது. 

விலையில் மாற்றம் செய்யமுடியாவிட்டால் டெண்டர் நடைமுறையிலிருந்து விலகிக்கொள்ள அனுமதிக்கும்படியும் கோரிக்கை வைத்திருந்தது. முத்தூட் கோரிக்கைகளை நிராகரித்த சமூக நலத்துறை, அந்தநிறுவனம், செலுத்திய வைப்புத்தொகை 53 லட்ச ரூபாயை முடக்கியதுடன், டெண்டர் விதிகளை மீறியதாக கூறி அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்தது.

இந்த நடவடிக்கைகளை எதிர்த்து முத்தூட் எக்சிம் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. 

அதன் விசாரித்த நீதிபதிகள், ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பான விவகாரத்தில் நீதித்துறை ஆய்வு என்பது குறிப்பிட்ட வரையரைக்குட்பட்டது என சுட்டிக்காட்டியதுடன், எவ்வித அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படாத நிலையில் மாற்று முறைகள் மூலம் தீர்வு காணாமல் நீதிமன்றத்தை நாடமுடியாது என கூறி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கருப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து சமூக நலத்துறை ஆணையர் அளித்த பரிந்துரைக்கு முத்தூட் நிறுவனம் விளக்கம் அளிக்காத நிலையில், அதன்மேல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

544 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

102 views

பிற செய்திகள்

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் - அரசாணை

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

11 views

"சென்னை பெண்களின் ஆயுட்காலம் அதிகம்"

மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், சென்னையில் வாழும் பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 views

மாணவிகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ் - வெகுண்டெழுந்த மாணவர்கள்

மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை கைது செய்யக் கோரி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

அரசு பேருந்துக்குள் மழை நீர் - ரெயின் கோட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், ஓட்டுநர் ரெயின் கோட் அணிந்து பேருந்தை ஓட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

8 views

TN Corona Update | தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

10 views

பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டம் குன்னூரில், விடுதியில் தங்கி இருந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.