குழந்தைகளை வாங்கிய 5 பேர் கைது - காப்பக உரிமையாளரை தேடி வரும் தனிப்படை
மதுரையில் குழந்தை இறந்ததாக கூறி நாடகமாடிய விவகாரத்தில் காப்பக உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.ம
மதுரையில் குழந்தை இறந்ததாக கூறி நாடகமாடிய விவகாரத்தில் காப்பக உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.மதுரையில் கொரோனா தொற்றால் குழந்தை உயிரிழந்ததாக கூறி நாடகம் நடத்திய விவகாரத்தில் திடீர் திருப்பமாக குழந்தைகள் உயிருடன் இருந்தது தெரியவந்தது. குழந்தையை காப்பகத்தினர் விற்பனை செய்தது உறுதியான நிலையில் அதனை விலைக்கு வாங்கி நகைக்கடை அதிபர் கண்ணன், அவரின் மனைவி பவானி, மற்றொரு குழந்தையை விலைக்கு வாங்கி எவர்சில்வர் பட்டறை தொழிலாளி சகுபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே காப்பக நிறுவனர் சிவகுமார், மதர்சா ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னையில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிவக்குமாரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
=
Next Story
