60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை

தமிழகத்திற்கு மொத்தமாக 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் அதில் இன்று வரையும் 1,10,34,270 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
x
தமிழகத்திற்கு மொத்தமாக 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் அதில் இன்று வரையும் 1,10,34,270 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தற்போது வரையிலும் மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு நேரடி கொள்முதல் இரண்டு தடுப்பூசிகளும் சேர்த்து

கோவிஷூல்டு - 96,44,320

கோவாக்ஸின் - 20,72,570 ( இன்று வந்த 60 ஆயிரம் தடுப்பூசியும் சேர்த்து ) 

 மொத்தம் தடுப்பூசி வந்தது -  1,17,18,890 

மொத்தம் தடுப்பூசி செலுத்தி கொண்டது - 1,10,34,270

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரக்கூடிய சூழலில் கடந்த ஒரு வார காலமாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தது.  
இந்த நிலையில் 10 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரை 14,92,930 தடுப்பூசிகள் வந்தது. மேலும் இன்று கூடுதலாக மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது.. மேலும், ஜூன் மாத நிலவரப்படி தமிழகத்திற்கு மத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் திட்டத்தின் கீழ் 42.58 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பல்வேறு கட்டங்களாக தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்