"ஆன்மிகத்தை காரணம் காட்டி சிலர் தி.மு.க.வை வீழ்த்த முயற்சி" - ஸ்டாலின்

ஆன்மீகத்தை காரணம் காட்டி சிலர், திமுகவை வீழ்த்த நினைப்பதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆன்மிகத்தை காரணம் காட்டி சிலர் தி.மு.க.வை வீழ்த்த முயற்சி - ஸ்டாலின்
x
ராமநாதபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி என்ற ஒரே இலக்குடன் கட்சி தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கோட்டையை பிடித்து விடலாம் என்று பேராசையோடு காத்திருப்பவர்களின் ஆசையை நிறைவேறாமல் தடுக்க வேண்டியது திமுக தொண்டர்களின் பணியாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டு கொண்டார்.  ஆன்மீகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்தலாம் என்று சிலர் நினைப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மக்களுக்கு சேவை ஆற்றுவது தான் மகத்தான ஆன்மீகம் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை மேற்கோள் காட்டி பேசிய ஸ்டாலின்,  ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்