மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : ஜெயமாலா,அவரது சகோதரர் உள்பட 3 பேர் கைது

மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், டெல்லியில் கைதான ஜெயமாலா உள்பட 3 பேரை சென்னை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : ஜெயமாலா,அவரது சகோதரர் உள்பட 3 பேர் கைது
x
சென்னை யானைகவுனியில், கடந்த 11 ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், ஏற்கனவே, கைதான மூன்று பேரை பத்துநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த இறந்த சீத்தலின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதரர் விலாஷ் உள்பட மூன்று பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயமாலாவிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் சுட்டுக்கொல்லப்பட்ட  தபுபாயின் இரண்டு வளையல்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். டெல்லி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, நாளை சென்னை அழைத்து வர தனிப்படை போலீஸ் திட்டமிட்டுள்ளது. இதனிடையே, ஜெயமாலாவை அழைத்து வர, சென்னையில் இருந்து பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு டெல்லி சென்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்