"குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்" - உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து

குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
x
மூன்று பேருக்கு பரோல் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் என்.கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது போலீசார் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால்,இந்த நேரத்தில் கைதிகளுக்கு பரோல் வழங்கினால், பாதுகாப்பு இருக்காது என, நீதிபதிகள் தெரிவித்தனர். போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தும் நிலை உள்ளதாகவும், போலீசாரின் நிலை ஆதரவற்றவர்கள் போல் உள்ளதாக கூறினர். குருபூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சியினர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், பரோல் கேட்டு தாக்கலான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்