வலுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு கோரிக்கை - ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கும் நிலையில், 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தர தயார் என மத்திய அரசு வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது
x
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி தராமல் அமைதி காக்கிறார். 

* இந்த விவகாரத்தில் ஆளுநரின் அனுமதியைப் பெற்றே தீர வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டி வருகிறார்

* கடந்த திங்களன்று  ஜெயக்குமார், செங்கோட்டையன் , சிவி சண்முகம் , கே.பி.அன்பழகன்,  விஜயபாஸ்கர் ஆகிய 5 அமைச்சர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்தித்து பேசினர்.

* ஆனால் இந்த விவகாரத்தில் மற்றொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

* பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கென மத்திய அரசு கொண்டுவந்துள்ள  10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தினால் 7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தர தயார் என மத்திய அரசு வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

* இதனால் 10% இட ஒதுக்கீடு விவகாரத்தால் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தள்ளி போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  

* 10% இட ஒதுக்கீட்டை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது எனவும் தமிழகம் சமூக நீதி மாநிலம் எனவும் தமிழக அரசு தரப்பில் குறிப்பிட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

* 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதமாகும் சூழலில் இதற்காக அ.தி.மு.க.வுடன் சேர்ந்து போராட தி.மு.க. தயார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

* 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக மருத்துவக் கலந்தாய்வை தமிழக அரசு தள்ளிவைத்திருப்பதால் எப்போது ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் உள்ளனர். 
 


Next Story

மேலும் செய்திகள்