மழையில் நனைந்த நெல் மூட்டைகள் - கொள்முதல் நிலையத்தில் காத்துக் கிடக்கும் விவசாயிகள்

தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால், நனைந்த நெல் மூட்டைகளோடு விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர்.
மழையில் நனைந்த நெல் மூட்டைகள் - கொள்முதல் நிலையத்தில் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
x
அக்டோபர் 1ஆம் தேதி முதல், தற்போது வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு மாற்றப்படாததால்,  ஒவ்வொரு நிலையத்திலும் சுமார் 5 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக விவசாயிகளிடம் இருந்து புதிதாக நெல்மூட்டைகள்  கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் கொள்முதல் நிலையம் முன்பாக அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளோடு விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் 2 தினங்களாக பெய்து வரும் மழையால், நெல் மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு, நெல் கொள்முதலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்