குலசை தசரா திருவிழா 2ஆம் நாள் - ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்ற நிலையில், 2 ஆம் நாளான இன்று ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தவர்கள் தரிசனம் செய்தனர்.
x
மைசூருக்கு அடுத்த படியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா  வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பக்தர்கள் மாலையணிந்து  48 நாட்கள் அல்லது108 நாட்கள் விரதமிருந்து,  காளி, அம்மன், குறவன், குறத்தி, குரங்கு, சுடலைமாடசாமி, கருப்பசாமி போன்ற  வேடங்கள்அணிந்து கொண்டு, ஊர் ஊராக சென்று  தர்மம் பெற்று அம்மனுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம்.  தற்போது கோரோனா பரவல் காரணமாக அரசு விதித்த நெறிமுறைகளின் படி குலசை  தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று காலை 6 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  முககவசம் அணிந்தபடி சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்ததால்  அம்மனை சிரமம் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் பார்த்து  வழிபட்டதாக   பக்தர்கள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்