"அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் ஈ.பி.எஸ்" - ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
பதிவு : அக்டோபர் 07, 2020, 12:35 PM
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இந்த அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி அலுவலகத்திற்கு வந்த ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒரு​ங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனனின் முழு ஒப்புதலோடு இந்த நிகழ்வு நடைபெறுவதாக கூறினார். 

அ.தி.மு.கவின் வழிகாட்டு குழு அமைப்பு  : உறுப்பினர்கள் பெயரை அறிவித்தார் முதல்வர் 

இதைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.கவின் வழிகாட்டு குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தார். அந்த குழுவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் உள்பட 11 பேர் இடம்பெற்றிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். 

வழிகாட்டு குழு உறுப்பினர்கள் பெயர் பட்டியலை தொடர்ந்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.கவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி, தனது வாழ்த்துகளை துணை முதலமைச்சர் தெரிவித்தார்.  

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி : பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள் 

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிப்பால் உற்சாகம் அடைந்த தொண்டர்கள், அலுவலகத்திற்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதேபோல், திருச்சியிலும், அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். 


தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

606 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

220 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

155 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

22 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

19 views

பிற செய்திகள்

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

204 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

50 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

99 views

தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் - பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில், பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்..

301 views

7.5% உள் ஒதுக்கீடு : "முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம்" - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

16 views

"வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத மோடி" - தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு

வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் எங்கள் குடும்பம் மீது தனிநபர் தாக்குதல் நடத்துகிறார் என தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.