அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
x
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால், விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் , இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள்  ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அதே புகார் குறித்து வேறு அமைப்பு விசாரிக்க உத்தரவிட முடியுமா? எனவும், அந்த விசாரணை அமைப்பை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர் .. மேலும் இது குறித்து செப்டம்பர் 28ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்