தமிழக பொருளாதார ஆய்வு குழு - முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
x
தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து அவருடன் ஆலோசனை நடத்தினர் . பொது முடக்கம் காரணமாக  பல்வேறு துறைகள் பாதிப்படைந்துள்ள நிலையில், அதனை சீரமைக்கவும் , பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

"கிராமம், நகர்புறத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்" - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் வலியுறுத்தல்

முதலமைச்சரிடம் 275 பக்க அறிக்கையை தாக்கல் செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், கிராமம் மற்றும் நகர்புறத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். 2 மாதத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்