திமுக பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் - துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராசாவுக்கு வாழ்த்து

திமுக பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
x
திமுக பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில்,போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி - ஆ.ராசா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பேரிடர் காலத்திலும் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு, மருத்துக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு, முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீடு ஆகிய தீர்ப்புகளை திமுக வரவேற்றுள்ளது. இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் சமூக நீதி எந்தவிதத் தடையுமின்றி, தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது; அதைத் திரும்பப் பெற வேண்டும்" எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையை மத்திய அரசு, நிபந்தனையின்றித் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று திமுக கேட்டுக் கொண்டுள்ளது.தனிப் பெரும்பான்மை பலத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக, மத்திய அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகத்தான தீர்ப்பு என்றும், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் நிர்வாகத்தில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக, திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் விரோத கொள்கைகளை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் திமுகவை ஆட்சி பீடம் ஏற்றி, ஸ்டாலினை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்திட தொண்டர்கள் சூளுரை ஏற்போம் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்