ஆ.ராசா, பொன்முடிக்கு திமுகவில் புதிய பதவி? - நாளை நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தேர்வு

திமுகவில் துணை பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா மற்றும் பொன்முடி நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
x
திமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த சூழலில் திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளை 5 பேருக்கு அளிக்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாளை பொதுக் குழுவில்  ஒப்புதல் பெறப்படுகிறது. இதனால், ஏற்கனவே துணைப் பொதுச் செயலாளராக ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகிய மூவர் உள்ள நிலையில், மேலும் இருவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுகிறது.  அதன்படி, ஆ. ராசா மற்றும் பொன்முடி இருவருக்கும் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்