"சென்னை போலீசாருக்கு பிறந்தநாளன்று விடுமுறை" - மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு

சென்னை காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை வழங்கி மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை போலீசாருக்கு பிறந்தநாளன்று விடுமுறை - மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு
x
சென்னை காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு, அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை வழங்கி மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். பிறந்த நாள் கொண்டாடும், அனைத்து காவலர் மற்றும் அதிகாரிகளுக்கும், அன்றைய தினத்தில், தனது கையெழுத்திட்ட, பிறந்த நாள் வாழ்த்து அட்டையை வழங்கி, ஆணையர் மகேஷ்குமார் உற்சாகப்படுத்தி வருகிறார்.இதேபோல் தென் மண்டலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை அலுவலர் மற்றும் காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை அளிக்கப்படும் என,ஐ.ஜி முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்