காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

கோவையில் காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
x
கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பெயிண்டராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரிடம் நட்பாக பழகி வந்த தமிழ்ச்செல்வன், கடந்த இரு தினங்களுக்கு தனது காதலை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, தான் நட்பாக மட்டுமே பழகி வந்ததாக தமிழ்ச்செல்வனிடம்  கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் சிறுமியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது. மேலும் சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்