புதிய கல்விக் கொள்கை விவகாரம் : "ஒரு மாதமாகியும் கல்வியாளர் குழு அமைக்கப்படவில்லை" - கல்வியாளர்கள், ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் கல்வியாளர்கள் குழுவை அமைக்க பள்ளிக்கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை விவகாரம் : ஒரு மாதமாகியும் கல்வியாளர் குழு அமைக்கப்படவில்லை - கல்வியாளர்கள், ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
x
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த  புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் நடப்பு கல்வி ஆண்டில் அமலுக்கு வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  சூழலில் கடந்த மாதம் மூன்றாம் தேதி பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக முதலமைச்சர், மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்ற ஒற்றை அறிவிப்பை மட்டும் வெளியிட்டார் . இதனைத்தொடர்ந்து கல்வியமைச்சர் செங்கோட்டையன், புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை ஆராய கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதம் நிறைவு பெற உள்ள நிலையில் தற்போது வரை  கல்வியாளர்கள் அடங்கிய குழுவை  அரசு அமைக்கவில்லை என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்,. மேலும் புதிய கல்வி  கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. கல்வியாளர்கள் குழுவை அமைக்கவே ஒரு மாதத்திற்கும் மேலாக காலம் கடத்துவது பிரச்சினையை கிடப்பில் போடும் முயற்சி  என ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்