கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28ந் தேதி திறப்பு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ந் தேதி திறக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
x
கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி, செப்டம்பர் 18ந் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 28ந் தேதியும் திறக்கப்படும் என துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அடுத்தக்கட்டமாக, கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்