மத்திய அரசு வெளியிட்ட 3வது தளர்வில் மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை - விநாயகர் சதுர்த்தி விழா நடத்த கோரிக்கை விடுத்த பாஜக

கொரோனா விவகாரத்தில் 3வது தளர்வை வெளியிட்ட மத்திய அரசு, மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று கூறியிருந்த நிலையில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட 3வது தளர்வில் மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை - விநாயகர் சதுர்த்தி விழா நடத்த கோரிக்கை விடுத்த பாஜக
x
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த மத்திய உள்துறை அமைச்சகம் அண்மை காலமாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியிட்ட தளர்வில் சில முந்தையை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று அறிவித்திருந்தது. சமூக, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்திருந்த மத்திய உள்துறை அமைச்சகம் மத வழிபாடு நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும் ஊர்வலம் நடத்தவும் நீர் நிலைகளில் அவற்றை கரைக்கவும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்து முன்னணி உள்ளிட்ட மத அமைப்புகளும் கோர்க்கை விடுத்துள்ளன. தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த போது முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தினார். இந்நிலையில் மத்திய பாஜக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக இந்த கோரிக்கைகள் உள்ளது என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்