அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டம் - தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
x
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். லேசான அறிகுறியுடன் பதினான்கு நாட்கள் வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தினால்,  பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தெர்மல் மீட்டர், வைட்டமின் சி, ஜிங்க், விட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, அமுக்ரா மாத்திரைகள், மாஸ்க் மற்றும் சானிடைசர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்