நாளை சுதந்திரதின கிராம சபைக் கூட்டம் நடைபெறாது - கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை

மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
x
மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்