பட்டாசு கடைகளின் உரிமத்தை 2021வரை நீட்டிக்க தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வழக்கம் போல் உற்சாகமாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் அனுமதிக்குமா என கேள்வி பலரின் எழுந்துள்ளது.
பட்டாசு கடைகளின் உரிமத்தை 2021வரை நீட்டிக்க தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
x
தீபாவளி பண்டிகையை கொண்டாடவும் அதன் மூலமாக ஏற்படும் விற்பனையையும் அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்புடன் நம்பிக்கையோடு காத்திருப்பதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இ பாஸ் நடைமுறை காரணமாக பட்டாசுகளை கொள்முதல் செய்வதற்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பட்டாசு வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தீபாவளிக்கான 
நிரந்தர பட்டாசு கடை மற்றும் தற்காலிகமான பட்டாசு கடை ஆகியவற்றின் உரிமத்தை கடந்த ஆண்டின் உரிமத்தை 2021 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்