பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை தேதிகள் வெளியீடு - ஆக. 27 முதல் இட ஒதுக்கீடு முறையில் 11ஆம் வகுப்பு சேர்க்கை

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மழலையர் வகுப்பு முதல் சட்டக் கல்லூரிகள் வரை நடைபெறும் மாணவர் சேர்க்கை தேதிகள் வெளியாகி உள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை தேதிகள் வெளியீடு - ஆக. 27 முதல் இட ஒதுக்கீடு முறையில் 11ஆம் வகுப்பு சேர்க்கை
x
10 மற்றும்12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை  நடந்து வருகிறது. மழலையர் வகுப்பு முதல், ஒன்று, ஆறு, மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு வரும் 17ஆம் தேதி முதல் சேர்க்கை தொடங்குகிறது. வரும் 27ஆம் தேதி இட ஒதுக்கீடு அடிப்படையில் 11ஆம் வகுப்பு சேர்க்கை தொடங்க உள்ளது. இதனிடையே, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு, வரும்16ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், ஆன்லைன் பதிவு முடிந்துவிட்ட நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாம் முடிந்துவிட்டது. 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான சேர்க்கைக்கு  www.tndalu.ac.in  என்ற இணையதளம் வழியாகவும்,   நேரடியாகவும் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கவும், செப்டம்பர் 4ஆம் தேதி கடைசிநாள். 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பில் சேர வரும் 17ஆம் தேதி முதல் ஆன்லைன் பதிவு துவங்குகிறது. பி.எட்., கால்நடை மருத்துவ படிப்பு ஆகியவற்றில் சேர்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகறிது. 


Next Story

மேலும் செய்திகள்