சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த காவலர்கள் நியமனம்

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் சோதனை பணிகளில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என மத்திய தொழில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
x
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் சோதனை பணிகளில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என மத்திய தொழில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்தி தெரியாததால் திமுகவை சேர்ந்த கனிமொழி எம்.பி.யை இந்தியரா? என சிஐஎஸ்எப் பெண் காவலர் கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. இந்நிலையில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சிஐஎஸ்எப் டி.ஐ.ஜி. ஸ்ரீராம்  வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளும் இடத்தில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை நடத்தும் இடங்களில் தமிழ் தெரிந்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்