ஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்

தாம்பரம் அருகே கஞ்சா தர மறுத்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்
x
முடிச்சூரை சேர்ந்த பெயிண்டர் ரவி என்ற லாரன்சுக்கும், அவரது நண்பர் ராஜேசுக்கும் கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்றிரவு, ராஜேஷ் தனது நண்பரிடம் கஞ்சா கேட்டுள்ளார். தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், நண்பரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொன்றுள்ளார். இது குறித்து அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியின்  உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கத்தியால் குத்தி கொன்ற ராஜேஷை கைது செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்