கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை மாவட்ட ஆட்சியர் - 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பூரண குணமடைந்து பணிகளுக்கு திரும்பினார்.
கொரோனாவில்  இருந்து குணமடைந்த கோவை மாவட்ட  ஆட்சியர் - 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பூரண குணமடைந்து பணிகளுக்கு திரும்பினார். அவருக்கு கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொற்று உறுதியான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குணமடைந்து வீடு திரும்பிய அவர்,பந்தய சாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். தற்போது 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பியுள்ள அவரை அதிகாரிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்