27 முட்டைகளை அடைகாத்து வந்த பாம்பு

கடலூர் முதுநகர் அருகே மணகுப்பம் கிராமத்தில், 27 முட்டைகளை இட்டு, நல்ல பாம்பு ஒன்று அடைகாத்து வந்துள்ளது.
27 முட்டைகளை அடைகாத்து வந்த பாம்பு
x
கடலூர் முதுநகர் அருகே மணகுப்பம் கிராமத்தில், 27 முட்டைகளை இட்டு, நல்ல பாம்பு ஒன்று அடைகாத்து வந்துள்ளது. சுபாஷ் என்பவரின் வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில், பாம்பு முட்டைகளை இட்டு, அடை காத்துள்ளது. இதை கண்ட சுபாஷ், உடனடியாக வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிக்கவே, அவர்கள் வந்து பாம்பு பிடித்து, காப்புக்காட்டில், பாதுகாப்பான இடத்தில் விட்டனர். 

வியாபாரிகள் பாதுகாப்பிற்காக தற்காலிக காவல்நிலையம்

கொரோனா பரவலால், மதுரை பரவை காய்கறி சந்தை, உச்சபட்டி துணைக்கோள் நகரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அங்கு, வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது. இருப்பினும், வியாபாரிகளின் பாதுகாப்புக்காக, தற்காலிகமாக புறக்காவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்து, அதன் பணிகள் நிறைவந்ததது. இந்நிலையில், அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் திறந்து வைத்தார்.

சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை

ஒசூர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நொகனூர் வனப்பகுதியில் உள்ள ஏராளமான காட்டுயானைகள் அவ்வப்போது கிராம பகுதிக்குள் வலம் வருவது வழக்கம். இந்நிலையில், கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை, தேன்கனிக்கோட்டை பகுதியில் சாலையோரம் வந்து நீண்ட நேரமாக முகாமிட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்றனர். பின்னர் அந்த ஒற்றை காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது. 

பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணிகள் நிறைவு  - விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டம், சிம்ஸ்பூங்கா பழப்பண்ணையில் ஜாம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி,  குன்னூர் மற்றும் கொடைக்கானலில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 கிலோ பேரிக்காயை, கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. இதனை, தோட்டக்கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜாம் பாட்டில்கள் 300 கிராமுக்கு 90 ரூபாயும், 500 கிராமுக்கு 110 ரூபாயும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மாவட்டமாக அறிவிக்க  கோரிக்கை - கைகளில் பதாகைகள் ஏந்தி பொது மக்கள் முழக்கம் 

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  கும்பகோணம் ஐயப்பன் நகர் பகுதியில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்து  பலர் பதாகைகளை கைகளில் ஏந்தி  கும்பகோணம் மாவட்டம் அமைக்க கோரி முழக்கமிட்டனர்.

மூட்டை மூட்டையாக சிக்கிய புகையிலை பொருட்கள்

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியில் உள்ள வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். இதில், மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 லட்சம் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பதுக்கி வைத்திருந்த‌ கண்ண‌ன் என்பவரை தேடி வருகின்றனர். 

பாழடைந்த கிணற்றில் கவிழ்ந்து நொறுங்கிய மோட்டார் பைக்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே.பேட்டை அருகே,
பாழடைந்த கிணற்றில் மோட்டார் பைக் கவிழ்ந்து நொறுங்கியதில், பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒரு மாணவர் உயிர் தப்பினார். பள்ளி மாணவர்களான சந்தோஷ், சத்யா, விஜயகுமார் கொரோனா விடுமுறை என்பதால், கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கூலி வேலைக்கு சென்று விட்டு, பைக்கில் திரும்பி வந்த போது, கட்டுப்பாட்டை இழந்ததில், அருகில் இருந்த 80 அடி உள்ள பாழடைந்த கிணற்றில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் சத்யா, சந்தோஷ் உயிரிழக்க, விஜயகுமார் பைக்கில் இருந்து குதித்ததால், உயிர் தப்பினார். 

நள்ளிரவில் நடமாடும் மர்ம மனிதர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திடசமுத்திரம்  காளியம்மன் கோயில் தெருவில் இரு தினங்களுக்கு முன்னர்  ஒரு கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தெருவில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, சைக்கிளில் வலம் வந்த மர்ம நபர் ஒருவர் ஒளிரும் பொருளை கூரை வீட்டின் மீது எறிந்து விட்டு சென்றதும், வீடு தீப்பற்றி எரிந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த நபர் இதற்கும் முன்பாக நள்ளிரவு 2 மணியளவில் சாலையில் வெடி வெடிக்க செய்துள்ளார். மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், நடமாடுவது சைக்கோ மனிதனாக இருக்க  கூடுமோ என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் கைவரிசை

தஞ்சையில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நாஞ்சிக்கோட்டை சாலை காயிதே மில்லத் நகரில் வசித்து வரும்,  காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் கடந்த 7 ஆம் தேதி குடும்பத்தினருடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் 85 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை" - 2 பேருக்கு அரிவாள் வெட்டு - போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் இளைஞர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிஷோர் மற்றும் பாலாஜி என்ற இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரதாப் மற்றும் காட்பாடியை சேர்ந்த ஹரி, கிஷோர் மற்றும் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு, சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால், நடைபெற்ற இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






Next Story

மேலும் செய்திகள்