கபினி, கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து நீர் திறப்பு - மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 51,000 கன அடி

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பியது.
கபினி, கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து நீர் திறப்பு - மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 51,000 கன அடி
x
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின்  காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பியது. இதனால் அந்த அணைகளின்  பாதுகாப்பு கருதி வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம், கன  அடிக்கு மேல்  உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் முதல் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 51 ஆயிரம், கன அடியிலிருந்து 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஐந்து அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக உள்ளது. 90 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்