ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமான நிரம்பி வருகின்றன.
ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள்  வேகமான நிரம்பி வருகின்றன. இதையடுத்து அணைகளில் இருந்து  உபரிநீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு வினாடிக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கனஅடி நீர்வர தொடங்கியுள்ளது. ஊரடங்கு காரணமாக  ஒகேனக்கல் சுற்றுலா தளம் மூடப்பட்டுள்ள நிலையில் காவிரி கரை ஓரங்களில் வசிப்பவர்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு  செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்