"ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் சம்பள பிடித்தம்" - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் சம்பள பிடித்தம் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
x
அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு, ரேஷன் கடைகள் செயல்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும், போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யுமாறும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்