"புதிய வாகனங்கள் வாங்க முடியாத நிலையில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கலாம்" - போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு அனுமதி

சொந்தமாக வாகனம் வாங்க முடியாத நிலையில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து, அரசின் வழித்தடங்களில் இயக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வாகனங்கள் வாங்க முடியாத நிலையில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கலாம் - போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு அனுமதி
x
தமிழகத்தில் சேவை நோக்கத்தில் போக்குவரத்து கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அரசுக்கு லாபம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் செலவு, கடன், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்க முடியாமல்அரசுக்கு சுமை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே புதிய வாகனங்களை வாங்க இயலாத நிலையில், தனியாரிடம் இருந்து வாடகை அடிப்படையில், வாகனங்களை பெற்று, அரசின் வழித்தடங்களில் இயக்க போக்குவரத்து கழகங்களுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான  அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாநில போக்குவரத்து கழகங்களால் தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்குவதற்காக, சொந்தமாக வாகனங்களை வாங்க முடியாத அவசர சூழ்நிலை எழும்போது, அந்த போக்குவரத்துக் கழகம் எந்தவொரு தனியார் வாகனத்தையும் வாடகைக்கு எடுத்து, 'பெர்மிட்' பெற்று இயக்க இந்த அரசாணை வகை செய்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்