சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை

சென்னையில் விடிய விடிய பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது.
x
சென்னையில் விடிய விடிய பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. சைதாப்பேட்டை, அடையார், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், திருவான்மியூர், தேனாம்பேட்டை, கிண்டி ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது. ஆங்காங்கே விட்டு விட்டு கன மழை பெய்தாலும், தொடர்ந்து சாரல் மழையும் நீடித்து வருகிறது.  

சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் தொடர் மழை

சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம், பழவந்தாங்கல் போன்ற பகுதிகளில் இரவு 10.30 மணியில் இருந்து மிதமான மழை பெய்து கொண்டு  இருக்கிறது.

பலத்த காற்றுடன் கூடிய கனமழை - குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி

பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பகல் நேரத்தில் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், மாலையில் பொன்னேரி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, சோழவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட இடங்களில் சுமார் 30 நிமிடங்கள் கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

திருவண்ணாமலையில் கனமழை நீர்மட்டம் உயர்வு - பொதுமக்கள் மகிழ்ச்சி 

திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் மாலையில் இருந்து, இடி- மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதுடன், நீர்நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரியில் சூறைக்காற்றுடன் கனமழை 

நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. தேவாலா, பந்தலூர், கூடலூர், நடுவட்டம், ஊட்டி, கிளன்மார்கன், அவலாஞ்சி, கோடநாடு, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. மழையோடு, கடும் குளிரும் நிலவி வருகிறது. பலத்த காற்று வீசுவதால் அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டு வருகிறது

சாரல் மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி/

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், அன்று பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்