நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மீது புகார் அளித்த நடிகை வனிதா விஜயகுமார் - அவதூறான செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு

தன்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்புவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்ட 4 பேர் மீது நடிகை வனிதா விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.
x
நடிகை வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் பலரும் அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். இதனிடையே அவதூறு பரப்பியதாக சூர்யா தேவி என்ற பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பரப்புவதாக வனிதா விஜயகுமார் வடபழனி காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்