சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக கூடுதல் புகைப்படங்கள், தடயங்கள் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான கூடுதல் புகைப்படங்கள், தடயங்கள், மற்றும் ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
x
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான கூடுதல் புகைப்படங்கள், தடயங்கள், மற்றும் ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் அவற்றை சிபிஐ வசம் ஒப்படைத்தார். இந்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருக்கும் எஸ்ஐ பால்துரை உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, வரும் திங்கள் கிழமையன்று சிபிஐ சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்