வேலூரில் ஊரடங்கு காலத்தில் 73 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

கடந்த ஒரு வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் 12 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
x
கடந்த ஒரு வாரத்தில்  வேலூர் மாவட்டத்தில் 12 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுவரை ஊரடங்கு காலத்தில் மட்டும் 73 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் சேண்பாக்கம் பகுதியில் இன்று 16 வயது சிறுமிக்கும், 27 வயது இளைஞருக்கும் திருமணம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அங்கு சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்ததை அடுத்து, அதனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்