தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க தகுதியானவர்கள் முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
x
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்தாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த பிளாஸ்மா தெரபி முறையை பின்பற்ற இருப்பதாகவும், 18 முதல் 65 வயதுடையவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்றும் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்றும், தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்