கோயிலில் கொள்ளையடிக்க போனவருக்கு கால்முறிவு - மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட ஊர்மக்கள்
கோயிலில் கொள்ளையடிக்க போன திருடனுக்கு காயம்பட்ட நிலையில் அவரை ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்த விநோத சம்பவம் ஈரோடு அருகே நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள பெரியகாட்டூரில் பெரியாண்டிச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வந்த மர்மநபர் ஒருவர் உள்ளே இருந்த உண்டியலை உடைத்துக் கொண்டு இருந்துள்ளார். சத்தம் கேட்டு மக்கள் வருவதை பார்த்த அவர் திடீரென ஓட முயன்ற போது திடீரென அந்த நபர் கீழே விழுந்தார். இதில் அவரின் கால் முறிந்தது. இதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்ட திருடனை அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், வேலை இல்லாததால் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றதும் தெரியவந்தது.
Next Story