ஊரடங்கு தரவுகளால் வாகனங்களால் நிரம்பி வழியும் சாலைகள் - பறிமுதல் செய்த வாகனங்கள் ஒப்படைப்பு

சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை நகர சாலைகள் மாநகர பேருந்துகள் தவிர பிற வாகனங்களால் நிரம்பி வழிந்தன.
x
கொரோனாவின் கோர தாண்டவம் காரணமாக, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முதல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி, மீன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டது. இதனால், சென்னை மாநகர சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிந்தன. பொது போக்குவரத்தான மாநகரப் பேருந்துகள் தவிர, தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்சிகள், இருசக்கர வாகனங்கள் இயக்கம் எப்போதும் போலவே இருந்தன. கடந்த பதினேழு தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல்கள் மீண்டும் இயக்கப்பட்டு வாகன போக்குவரத்து முறைப்படுத்தப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்