சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, சிபிசிஐடி போலீசார் முன்பு, உயிரிழந்த பென்னிக்சின், நண்பர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
x
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கடந்த 5- நாட்களாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5-பேரை சிபிசிஐடி போலீசார் 3-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்காக உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்கள் 5-பேர் ஆஜராகி உள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் ஜெயராஜ் , பென்னிக்ஸ்-சை 19-ம் தேதி அன்று விசாரணைக்கு காவல் நிலையம் சென்றதை கண்ணால் பார்த்தவர்கள் ஆவர். 

Next Story

மேலும் செய்திகள்