ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் ஆறுதல் - ரூ.5 லட்சம் நிதி உதவி

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
x
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார். சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் , பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்ற சரத்குமார், புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களுக்கு சரத்குமார் ஆறுதல் கூறினார். இதை தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்